increment for tamilnadu govt employees

தமிழக அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. ஊதியம் உயர்த்தப்பட்ட பிறகு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.15,700 மற்றும் அதிக பட்ச ஊதியமாக ரூ.2,25,000 இருக்கும். இந்த ஊதிய உயர்வு 01.01.2016 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேபோல் மற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை முழுமையாக அமல் செய்வது குறித்து அரசாணைகளை வெளியிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்..

இதன்மூலம் ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வுகள் 01.10.2017 முதல் பணப்பலன்களாக அளிக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது.

அதுபோலவே குடும்ப ஓய்வூதிய பெறுவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.7,850 மற்றும் அதிகபட்சமாக ரூ.1,12,500 வழங்கப்பட உள்ளது.

பணியில் இருந்து ஓய்வு பெறும் பொழுது வழங்கப்படும் பணிக்கொடைக்கான உச்ச வரம்பானது தற்பொழுது நடைமுறையில் உள்ள ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.

இந்த ஏழாவது ஊதியக்குழுவின் ஊதிய உயர்வு குறித்த பட்டியலை கிரேடு வாரியாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,

 அலுவலக உதவியாளர்களின் ஊதியம் ரூ.21,792இல் இருந்து ரூ.4,928 அதிகரித்து ரூ.26,720 ஆக உயர்ந்துள்ளது.

இளநிலை உதவியாளர் ஊதியம் ரூ.37,936இல் இருந்து ரூ.9,549 அதிகரித்து ரூ.47,485 ஆக அதிகரித்துள்ளது.

இடைநிலை ஆசிரியர் ஊதியம் ரூ.40,650 ல் இருந்து ரூ.50,740 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆய்வாளர்களுக்கான ஊதியம் ரூ.69,184இல் இருந்து ரூ.15,716 அதிகரித்து ரூ.84,900 ஆக உயர்ந்துள்ளது.

துணை ஆட்சியருக்கான ஊதியம் ரூ.81,190இல் இருந்து ரூ.17,755 அதிகரித்து ரூ.98,945 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பார்வைக் குறைபாடு, மாற்றுத்திறனாளி, காதுகேளாதோரின் ஊர்திப்படி ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இளநிலை உதவியாளர் ஊதியம் ரூ.37,936இல் இருந்து ரூ.47,485 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சத்துணவு அமைப்பாளர்கள் ஊதியம் ரூ.10,810லிருந்து ரூ.2,910 அதிகரித்து ரூ.13,720 ஆக அதிகரித்துள்ளது.

அவர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சத்துணவு சமையலர் ஊதியம் ரூ.6,562இல் இருந்து ரூ.2,118 அதிகரித்து ரூ.8,680 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர், அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர், கிராம பஞ்சாயத்து செயலாளர் ஆகியோருக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.1,500இல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.