தொன்மைவாய்ந்த சிலைகளையும் மீட்பதற்கான சிலை கடத்தல் தடுப்பு மற்றும் மீட்பு பிரிவு போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தொன்மைவாய்ந்த சிலைகளையும் மீட்பதற்கான சிலை கடத்தல் தடுப்பு மற்றும் மீட்பு பிரிவு போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடத்தப்பட்ட சிலைகளை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போன சிலைகளை வல்லுனர் குழு மூலம் ஆய்வு செய்து மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, இதற்காக இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 6 துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 9 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 130 பேரை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 11 அதிகாரிகளின் ஊதியம், வாகன போக்குவரத்து செலவு, உபகரணங்கள் வாங்க என மொத்தமாக இதற்காக 17.88 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
