income tax ride in p.chithambaram house

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டு அளவை குறைத்து காட்டி அனுமதி வழங்கி உள்ளனர்.

இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைடுத்து தற்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் வீடு அலுவலகங்கள் உள்ளிட்ட 17 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது.

மேலும் கார்த்தி சிதம்பரத்திடமும் வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே ப.சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மணப்பறை அருகே உள்ள வையம்பட்டியில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.