சென்னையில் இன்று அதிகாலை முதல்  10 க்கும் மேற்பட்ட இடங்களில்  வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுதும் 50 இடங்களில் இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. 

சென்னை சாலிகிராமம், வளசரவாக்கம் , விருகம்பாக்கம் , ராயபேட்டை , மைலாப்பூர் உள்ளிட்ட  10 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா முழுதும் 82 இடங்களில் நடக்கும்  வருமான வரித்துறையின் சோதனையின் ஒரு பகுதியாக  சோதனை நடைபெறுகிறது. 

ஹைபவர் என்ற நிறுவனம், இடிஏ என்ற பிரபல நிறுவனங்களை நடத்துபவர்  ஹலித் புகாரி இவர்களது நிறுவனம் மின்சாரம், ரியல் எஸ்டேட் , கட்டுமானம் என பரந்து விரிந்த நிறுவனம் ஆகும். சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானமும் இவர்களது நிறுவனம் ஆகும். 

 மின்சாரம் தயாரிப்பு தொழில் பிரதான தொழில் ஆகும் , இந்நிறுவனம்  பல கோடி வரி ஏய்ப்பு செய்ததாக கூறி  நிறுவன் உரிமையாளர் மற்றும் அதன் தொடர்புடையவர்கள்  வீடு அலுவலகம் பகுதிகளில் இன்று காலைமுதல்  சோதனை. சாலிகிராமம் மைலாப்பூர் , விருகை . காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  

பி.எஸ்.அப்துர்ரஹ்மான் பல்கலை கழக தலைமை அலுவலகம் , பிரபல தனியார் வணிகவளாக நிறுவன உரிமையாளர்  நுங்கம்பாக்கம் வீட்டிலும் , தர்ம துரை படத்தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வீடு முதலிய இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. 

சென்னையில் 10 வெவ்வேறு நிறுவனங்களில் 400 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது தவிர சென்னை புறநகரான தாம்பரம் முடிச்சூர் உள்ளிட்ட 25 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. காரைக்கால் , ராமநாத புரம் உள்ளிட்ட 50 இடங்களில் இந்த சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.