income tax raid radika

?நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனம் ரூ 4.97 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து சரத்குமார், ராதிகா ஆகியோர் கைது செய்யப்படலாம் கூறப்படுகிறது

கடந்த வெள்ளிக் கிழமை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் என ஆலோனை மேற்கொண்டனர். அதே நேரத்தில் நடிகர் சரத்குமார் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், ஆவணம் தொடர்பாக வருமான வரித்துறையினர் சரத்குமாரிடம் கடந்த 8-ஆம் தேதியன்று காலை 11.20 தொடங்கி மாலை 07.30 மணி வரை விசாரனை நடத்தினர்.

இந்த நிலையில், சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகாவுக்கு சொந்தமான தேனாம்பேட்டை ஜெயம்மாள் சாலையில் உள்ள ராடன் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் திடீர் சோதனை நடத்தினர்.

விசாரணையின்போது சரத்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், இச் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராடன் நிறுவனத்தின் வங்கி கணக்குகளும், சில ஆவணங்களும் சரத்குமார் பெயரிலும், ராதிகா பெயரிலும் இருந்ததால், அதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

ராடன் நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்க சரத்குமார், ராதிகா சரத்குமாருக்கு இருவரும் சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகளின் முன்னிலையில் ஆஜராகினர்.

அவர்களிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டதில் ராடன் நிறுவனம் ரூ 4.97 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிவந்துள்ளது.

இதை சரத்குமார், ராதிகா சரத்குமார் இருவரும் ஒப்புதல் அளித்துள்ளதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன .அதே நேரத்தில் இந்த வரி ஏய்ப்பு தொடர்பாக இருவரும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.