ராம் மோகன் ராவ் கூறிய அடுக்கடுக்கான கருத்துகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சர்ச் வாரண்டில் ராம் மோகன்ராவின் பெயர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒருவர் பெயர் இருந்தாலே அதன் தொடர்புடைய யாருடைய வீட்டிலும் சோதனை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 13 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையி 24 கோடி ரூபாய் பணமும், தங்கம் வெள்ளி பரிசு பொருட்கள் , ராம் மோகன் ராவ் அவரது வீடுகளிலிருந்து சொல்லும்படி எதுவும் பறிமுதல் செய்யவில்லை , வீடு அலுவலகங்களில் , ஆவணங்கள் பொருட்களை மட்டுமே எடுத்து செல்லப்பட்டுள்ளது. 

ராம் மோகன ராவ் சொல்வது போல் ஒட்டுமொத்த சோதனைக்கான ஆதாரமாக இதை கொள்ளமுடியாது, ஆனால் வருமான வரித்துறை சார்பில் ஏற்கனவே பல ஆவணங்களை ஆதாரங்களை சேகரித்து வைத்துள்ளோம். தலைமை செயலாளர் வீடு , தலைமை செயலகத்தில் சாதாரணமாக சோதனை நடத்த முடியாது. 

ஆனால் உரிய ஆதாரங்கள் இருந்ததால், மாநில அரசு தலைமை செயலகம் என்பதால் மத்திய அரசின் உரிய அனுமதி பெற்றுத்தான் சோதனை நடத்தப்பட்டது என்று தெரிவித்தனர்.

மாநில அரசின் , துறைகளின் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற ராம் மோகனராவின் குற்றச்சாட்டை மறுத்த அதிகாரிகள் , வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு முன்னர் உரியவர்களிடம் அனுமதி பெற வேண்டும், முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.