- Home
- Tamil Nadu News
- குளிருக்கும்.. வெயிலுக்கும் கொஞ்சம் பிரேக்.. மழை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த வானிலை மையம்!
குளிருக்கும்.. வெயிலுக்கும் கொஞ்சம் பிரேக்.. மழை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த வானிலை மையம்!
தமிழகத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், வரும் நாட்களில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

கடும் பனிபொழிவு
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் முடிந்த நிலையில் நடுங்க வைக்கும் அளவிற்கு கடும் பனிபொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சுகின்றனர். அதிகாலை நேரத்தில் சாலையை மறைக்கும் அளவுக்கு பனிபொழி நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஏரிய விட்டவாரே செல்கின்றனர். மேலும் விமான மற்றும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு மற்றும் காலையில் பனிபொழிவு என்றால் பிற்பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
வானிலை மையம்
இந்நிலையில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மழைக்கு வாய்ப்பு
அதேபோல் ஜனவரி 23ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
ஜனவரி 24ம் தேதி
கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
உறைபனி எச்சரிக்கை
குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி - இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை
இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை அப்டேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

