ராம்மோகன் ராவின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு வருமானவரித்துறை சார்பில் அதிரடியாக பதில் தெரிவித்துள்ளனர். ராம் மோகனராவின் கேள்விகளும் வருமான வரித்துறையின் பதில்களும்.
நேற்று காலை முன்னாள் தலைமைசெயலாளர் ராம்மோகன ராவ் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை வருமான வரித்துறையினர் மீது சுமத்தினார். அதற்கு வருமான வரித்துறையினர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
கேள்வி பதில் :
ராம் மோகன ராவ் : தலைமை செயலாரான என் வீட்டிலேயே ரெய்டா ? தலைமைசெயலகத்திலேயே ரெய்டா?

வருமான வரித்துறை : வருமான வரிச்சட்டம் 132ன் படி ஒருவர் வீடு வாகனம் எதாவது ஒரு இடத்தில் வைத்திருப்பதாக சந்தேகப்பட்டால் சோதனை நடத்த வருமான வரித்துறைக்கு அதிகாரம் இருக்கிறது.
ராம் மோகனராவ்: துணை ராணுவத்தினரை எப்படி அழைத்து வரலாம்:
வருமான வரித்துறை: 132(2) படி சோதனை அதிகாரிகள் தங்கள் பாதுகாப்புக்கு தேவை என்றால் தேவைப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம். பாதுகாப்பு ஆட்களை அமர்த்தி கொள்ளலாம்.
ராம் மோகன ராவ்: யாரை கேட்டு தலைமை செயலகத்தில் நுழைந்தீர்கள் , துணை ராணுவப்படை அங்கு எப்படி போகலாம்.
வருமான வரித்துறையினர்: ஐஏஎஸ் அதிகாரி தலைமைசெயலகம் சம்பந்தப்பட்ட சிவதாஸ் மீனாவிடம் அனுமதி பெற்றோம். துணை ராணுவப்படையினர் உள்ளே வரவில்லை தங்கள் வாகனத்திலேயே அமர்ந்திருந்தனர்.
ராம் மோகன ராவ் : என்னை கேட்காமல் என் அறையில் சோதனையா?
வருமான வரித்துறை: விசாரணைக்கு தேவைப்படும் முக்கிய செல்போன்கள் இரண்டு அவரது அறையில் வைத்திருப்பதாக ராம்மோகன ராவ் சொன்னதாலேயே ராமமோகன ராவ் தெரிவித்த அடிப்படையில் அவரது அறையில் செல்போன் கைப்பற்றப்பட்டது.

ராமமோகன ராவ்
; சோதனையில் என் வீட்டிலிருந்து 1 லட்சத்து 12 ஆயிரம் பணம் பணம் ,சில பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன.
வருமான வரித்துறை: சோதனையில் எல்லாம் கைப்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. ஆவணங்கள் , சேகர் ரெட்டியின் கைப்பற்றப்பட்ட டைரியில் யார் யாருக்கு எவ்வளவு என்பதில் ராமமோகன ராவ் அவரது மகன் விவேக் குறித்த விபரங்கள் அவரது பணம் , மற்ற ஆவணங்கள் எங்கெங்கு இருக்கும் என்ற அடிப்படையில் சோதனை நடத்தப்படுகிறது. ஆதாரமில்லாமல் சோதனை நடத்த வாய்ப்பில்லை.
ராம் மோகன ராவ்: எனது மகன் அரசு டெண்டர் எடுத்தால் அதில் என்ன தவறு?
அரசு டெண்டர்கள் விதி மீறல்கள் முறைகேடான அனுமதி போன்றவை குறித்து முழு விசாரணை நடத்தப்படும், அவர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதும் , சொத்துக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது அது பற்றி முழுமையாக விசாரணை நடைபெற்று வருகிறது . முடிவில் பல உண்மைகள் வெளிவரும் என்று தெரிவித்துள்ளனர்.
விவேக் விசாரணைக்கு ஆஜராகாமல் இரண்டு நாளாக பதில் தராமல் இருக்கிறார், விசாரணைக்கு ஆஜராகா விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் , இவ்வாறு வருமானவரித்துறையினர் அதிரடியாக தெரிவித்துள்ளனர்.
