Income Tax Department ready for raid anbuchezhiyan house - High court allowed
பைனான்சியர் அன்புச்செழியன் வருமானத்தை மதிப்பீடு செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சினிமா இணை தயாரிப்பாளரும், நடிகர் சசிகுமாரின் உறனிருமான அசோக்குமார், கந்துவட்டி பிரச்சனை காரணமாக சென்னை, வளசரவாக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நெல்லையில், கந்துவட்டி கொடுமை காரணமாக இசக்கிமுத்து என்பவர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், சினிமா இணை தயாரிப்ளர் அசோக்குமார், கந்துவட்டி பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அன்புச்செழியன் தலைமறைவானார். அவர் மீது நடிகர் சசிகுமார் உள்ளிட்ட பலர் புகார் கொடுத்துள்ளனர்.
இதனிடையே வழக்கில் சிக்கி இதுவரை வெளியே தலைக்காட்டாமல் இருந்த பைனான்சியர் அன்புச்செழியன், சில தினங்களுக்கு முன் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் விழாவில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அன்புச்செழியன் வருமானத்தை மதிப்பீடு செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. வருமான மதிப்பீட்டின் மீது எந்த இறுதி உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று வருமான வரித்துறை உதவி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
