கொகுலம் நிதி நிறுவனத்தில் 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறையினர் சோதனை நிறைவு பெற்றது. இதில் கோகுலம் நிறுவனம் 1,100 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தை தலைமையிடமாக கொண்ட கோகுலம் நிதி நிறுவனத்திற்கு 100 க்கும் மேற்பட்ட ஏராளமான கிளைகள் உள்ளன.

இந்த நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்ததின் பேரில், சென்னை, கோவை, புதுச்சேரி, கர்நாடக, கேரளா உள்ளிட்ட 80 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

4 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனை இன்று நிறைவு பெற்றது. இந்த அதிரடி சோதனையில் கோகுலம் நிறுவனம் 1,100 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மேலும் வருமான வரி சோதனையில் அதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஹவாலா மோசடி வழக்கில் தொடர்பு உள்ளதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.