including government employee Two people arrested smuggle drugs to abroad

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் காவலாளர்கள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், அங்கிருந்து ஏழு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக அரசு ஊழியர் உள்பட இருவரை காவலாளர்கள் கைது செய்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளார்கள் அந்த தனியார் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர். போன மாதம் ஒன்றரை கோடி போதைப் பொருள் சிக்கிய பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.