In the Sivaganga alcoholic festivals horses and cows flared up
சிவகங்கை
சிவகங்கையில் மது எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு குதிரைகளும், மாடுகளும் சீறிப்பாய்ந்து பந்தயத்தில் கலந்து கொண்டன.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள சிறுமருதூர் தாணிச்சாவூருணி நாட்டாளம்மன் கோவில் “மது எடுப்பு விழா”வை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயம் கண்டதேவி கோவில் தெப்பக்குளத்தை சுற்றி வந்தது.
முதலில் நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் மொத்தம் ஏழு வண்டிகள் கலந்து கொண்டன. இதில், முதல் பரிசை தாணிச்சாவூருணி பிரியரஞ்சன், இரண்டாவது பரிசை உஞ்சனை சொர்ணலிங்கம், மூன்றாவது பரிசை சிறுமருதூர் ராஜ்குமார் பெற்றனர்.
பின்னர், நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயத்தில் பெரிய மாட்டு வண்டி பிரிவில் மொத்தம் ஒன்பது வண்டிகள் கலந்து கொண்டன. இதில், முதல் பரிசை விராமதி சந்திரன், இரண்டாவது பரிசை பல்லவராயன்பட்டி இளமாறன், மூன்றாவது பரிசை கீழவளவு சக்தி அம்பலம் ஆகியோர் பெற்றனர்.
பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் பத்து வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரிசை தேவகோட்டை சரவணன், இரண்டாவது பரிசை வெட்டிவயல் சுந்தரேசன், மூன்றாவது பரிசை சிங்கதிருமுருகப்பட்டி செல்லத்துரை ஆகியோர் பெற்றனர்.
அதேபோல காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூர் சடையாண்டி கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என மாட்டு வண்டி பந்தயம் அமராவதிபுதூர் – ஆறாவயல் சாலையில் நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டிப் பந்தயத்தில் மொத்தம் ஆறு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை ஐயம்பாளையம் சௌந்தர்சேகர், இரண்டாவது பரிசை ஆறாவயல் கார்த்திகேயன் அம்பலம், மூன்றாவது பரிசை வெளிமுத்தி வாகினி ஆகியோர் பெற்றனர்.
பின்னர், நடைபெற்ற சின்ன மாட்டு வண்டிப் பந்தயத்தில் மொத்தம் ஏழு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை காரைக்குடி கருப்பணன், இரண்டாவது பரிசை பத்திரம் வயல் பதினெட்டாம்படி கருப்பர், மூன்றாவது பரிசை கல்லூரணி பாலாஜி ஆகியோர் பெற்றனர்.
