In the role of a priest trying to take money - the government suspends officer

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணை சாமியார் வேடத்தில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய அலுவலர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வருவாய் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். இவர் அலுவலகத்திற்கு வந்த பெண்ணிடம் நைசாக பேசி தன்வசிய படுத்தி உள்ளார்.

பின்னர், அந்த பெண்ணை தனியறையில் வைத்து ஆபாசமாக படமெடுத்துள்ளார். அதனை காட்டி பல லட்சம் ரூபாய்கள் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதுடன், இல்லையென்றால் படங்களை இணையதளத்தில் வெளியிட போவதாக மிரட்டியுள்ளார்.

ராஜேந்திரன் சாமியார் வேடம் அணிந்து பணம் கேட்டு மிரட்டியது குறித்து பாதிக்கபட்ட பெண் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் அவர்களிடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்ததுடன் நடந்த சம்பவங்கள் உண்மை என தெரியவர வருவாய் அலுவலக உதவியாளர் ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.