நோட்டுகள் செல்லாது என அறிவித்த மோடியைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் காங்கிரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மோடியைக் கண்டித்து, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட காங்கிரசு கட்சி சார்பில் செங்கல்பட்டு பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதலில் காந்தி சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார்.

மாவட்டப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.காமராஜ், செங்கல்பட்டு நகரத் தலைவர் வி.முருகன், மறைமலைநகர் நகரத் தலைவர் எஸ்.தனசேகரன், மாவட்டத் துணைத் தலைவர் புருஷோத்தம், காஞ்சிபுரம் நகரத் தலைவர் ஆர்.வி.குப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மோடியைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாநிலத் துணைத் தலைவர் டி.எல்.சதாசிவலிங்கம் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரசு கட்சியினர் கலந்து கொண்டனர்.