வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் துவங்கியுள்ளதால், மக்கள் வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள தயாராகிவிட்டனர். தர்பூசணி, வெள்ளரிக்காய், பழ ஜூஸ்,  லெமன் ஜூஸ், சோடா ஆகியவற்றின் விற்பனையும் களைகட்டியுள்ளது. சாலையோரங்களில் புது, புது ஜூஸ் கடைகளும் முளைத்துள்ளன.பெண்கள் வெளியில் செல்லும்போது குடையுடன் செல்கின்றனர். 

தற்போது பகல் நேரங்களில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரஹீட்டுக்கும் மேல் வெளியில் கொளுத்தி வருகிறது. இதனால், மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர அச்சப்படுகின்றனர்.

சில இடங்களில் சூறைக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், வெப்பச்சலனம் காரணாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தற்போது செங்கல்பட்டு, பரனூர் சுற்றுவள்ளடாரப்பகுதகளில் சாரல் மழை பெய்து வருகிறது. வெயில் வாட்டி வதைத்து வரும் இந்த நேரத்தில் சாரல் மழை பெய்து வருவது அப்பகுதி மக்களை மகிழ்ச்சி ஆழ்த்தி உள்ளது.