In Madurai district the death of a husband who can not bear the death of the husband has caused a shock.

மதுரை மாவட்டத்தில் கணவனின் இறப்பினை தாங்கி கொள்ள முடியாத மனைவியும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் பொட்டப்பட்டியை சேர்ந்தவர் விஸ்வநாதன். வயது 65. இவர் தனியார் பத்திரிக்கை ஒன்றில் நிருபராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பரணி,60.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், பொட்டப்பட்டியில் உள்ள வீட்டில் விஸ்வநாதனும் பரணியும் ஒன்றாக வசித்து வந்தனர். இதைதொடர்ந்து விஸ்வநாதன் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

இந்த செய்தி கேட்டு பரணி திடீரென அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்தார். இதைபார்த்த அருகிலிருந்தோர் பரணியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் பரணியை மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி அதிர்ச்சியில் உயிரிழப்பதை படத்தில் மட்டுமே கண்டுள்ள பலருக்கு இது வியப்பாகவும் ஆச்சரியமாகவும் சோகமாகவும் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.