ஹலோ... சிக்னல் எப்போ சார் கிடைக்கும்...? டவரில் ஏறி 'சேட்டை' செய்த குடிமகன்.. நையப்புடைத்த போலீசார்..

கரூரில் தனது செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட குடிமகனால் பரபரப்பு ஏற்பட்டது.

In Karur a citizen got into a fight by climbing a cell phone tower for not getting a signal on his cell phone

கரூர் சின்னஆண்டான் கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் இரும்புக்கடையில் வேலை செய்து வருபவர் இளங்கோ. புத்தாண்டு தினமான நேற்று அவர் அதிகமாக மது அருந்தியுள்ளார்.பின்னர் தனது செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை என்று காரணத்திற்காக அவர் வேலை செய்துவரும் கடையின் அடுக்குமாடி குடியிருப்பு மேலுள்ள 100 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி அவது செல்போனிற்கு சிக்னல் கிடைக்கிறதா என சோதனை செய்துள்ளார்.

In Karur a citizen got into a fight by climbing a cell phone tower for not getting a signal on his cell phone

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் மற்றும் கரூர் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சுமார் ஒரு மணி நேரம் இளங்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திடீரென்று மழை பெய்யத் துவங்கியதன் காரணமாக செல்போன் டவரில் ஏறிய நபர் கீழே இறங்கினார். 

In Karur a citizen got into a fight by climbing a cell phone tower for not getting a signal on his cell phone

தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.தனது செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக இளைஞர் செல்போன் கம்பத்தில் ஏறிய சம்பவத்தை தொடர்ந்து, பொதுமக்கள் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.பின்னர் அந்த குடிமகனை காவல் நிலையத்துக்கு கூட்டி சென்று நன்றாக கவனித்து வீட்டிற்கு அனுப்பினர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios