in diwali tasmac liquor sold was less compared to last year says officials
தீபாவளி அன்று எப்போதும் கொடிகட்டிப் பறக்கும் டாஸ்மாக் மது விற்பனை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்து விட்டதாம்.

எப்போதுமே தீபாவளியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும். டாஸ்மாக் பார்களில் சரக்கு விற்பனை களை கட்டும். இந்த ஆண்டும் அதனை எதிர்பார்த்து விற்பனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதற்கு ஏற்ப இந்த ஆண்டு தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்னதாக, மது வகைகளின் விற்பனை விலை உயர்த்தப் பட்டது. எனவே, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அந்த ஒரு காரணத்தாலேயே இந்த ஆண்டு மது விற்பனை குறைந்துவிட்டதாம். கடந்த
17ஆம் தேதி மட்டும் ரூ.91 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. தீபாவளி தினமான 18ஆம் தேதி ரூ.132 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. ஆனால்,
கடந்த ஆண்டு இதே போன்ற தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளில் சேர்த்து 245 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு இரு நாட்களிலும் சேர்த்து ரூ.223 கோடிக்கு தான் மது விற்பனை நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
