திரையரங்குகளில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அதன் உரிமங்கள் தாற்காலிகமாக இரத்து செய்யப்படும் என கரூர் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக கரூர் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“கரூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில் வருவாய் கோட்டாட்சியர், எஸ்.பி ஆகியோர் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது.
புகார்களை பொதுமக்கள் 1077 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். அடுத்த 24 மணிநேரத்துக்குள் சம்பந்தப்பட்ட திரையரங்கை குழுவினர் ஆய்வு செய்து அதற்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும், கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்ந்தால் திரையரங்குகளின் உரிமங்கள் தாற்காலிகமாக இரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.
