In Pudukottai district hydrocarbon project
புதுகோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தியும் கண்டனங்கள் தெரிவதும் வருகின்றனர்.
இந்த போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த பாஜக முத்த தலைவர் இல. கணேசன்.
நாடு வளம் பெற வேண்டும் என்றால் ஒரு மாநிலமும், அங்கு வாழும் மக்களும் தேவையான தியாகத்தை செய்து தான் ஆகவேண்டும். நாட்டின் செல்வம் அதிகரிக்க அந்நாட்டில் உள்ள இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும் என்பது இயற்கை நியதி என கூறியுள்ளார்.
மேலும் இந்த திட்டம் குறித்த பிரச்சனைகளை பேசுவதும், விவாதிப்பதும் அவசியம்.
மாநிலத்தில் உள்ள இயற்கை வளங்களை பயன்படுத்தும் போது தான் அந்த மாநிலம் தொழில்வளம் பெருகி, பொருளாதார வளர்ச்சி அடையும் என குறிப்பிட்டுள்ளார்.
அதே போல நாடு வளம் பெற வேண்டும் என்றால், தனி மனிதன் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். இது அனைத்து மாநிலத்திற்க்கும் பொருந்தும் என இல. கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
