அதிமுகவின் எந்த விதிப்படி எடப்பாடி தரப்பு தீர்மானம் நிறைவேற்றியது? என்றும், தைரியம் இருந்தால் பொதுக்குழவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றட்டும் என்றும் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். 

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இதையொட்டி நேற்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. 

இதில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்தது சட்டவிரோதம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதைதொடர்ந்து டிடிவி தரப்பு ஆதரவாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலைலையில், செய்தியாளர்களை சந்தித்த தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ,  அதிமுகவின் எந்த விதிப்படி எடப்பாடி தரப்பு தீர்மானம் நிறைவேற்றியது? என்றும், தைரியம் இருந்தால் பொதுக்குழவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.