If we booked through facebok lots of facilities we cam get said bsnl
பி.எஸ்.என்.எல். அறிவிப்பு....!
பிஎஸ்என்எல் தற்போது புதுபுது சலுகையை வாரி வழங்கி வருகிறது .அந்த வகையில் லேண்ட்லைன், பிராட்பேண்ட், எல்.டி.டி.எச்.ஆகிய இணைப்புகள் பெற பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் மூலம் புதிதாக பதிவு செய்வோருக்கு ஒரு மாத வாடகைக் கட்டணம் இலவசம் என அறிவித்துள்ளது
இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்
எப்படி புக் செய்வது ?
ட்விட்டர், பேஸ்புக் வழியாக பி.எஸ்.என்.எல். பக்கத்துக்கு செல்ல வேண்டும். அந்த பக்கத்தில் ‘BOOK NOW’ என்பதில் உள்ளே செல்ல வேண்டும். இதில் லேண்ட்லைன், பிராட்பேண்ட், எப்.டி.டி.எச். ஆகிய 3 இணைப்புகளுக்கு பதிவு செய்யலாம். இதில் எந்த திட்டத்தில் பதிவு செய்தாலும் ஒரு மாத வாடகை கட்டணம் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது
இதுதொடர்பாக கூடுதல் தகவல்களை Chennai.bsnl.co.in என்ற இணையதளத்தில் சென்றும் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் இன் இந்த அற்புத சலுகையால் தற்போது பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்து கின்றனர்
