Asianet News TamilAsianet News Tamil

ஜாமீன்  வேண்டுமா ? 100 சீமைகருவேல மரத்தை வெட்டு..... நீதிபதி அதிரடி உத்தரவு..!!

if u want jaamin need to remove seemai karuvelam tree said judge
if u-want-jaamin-need-to-remove-seemai-karuvelam-tree-s
Author
First Published Mar 15, 2017, 2:38 PM IST


ஜாமீன்  வேண்டுமா ? 100 சீமைகருவேல மரத்தை வெட்டு..... நீதிபதி அதிரடி உத்தரவு

ஜாமினில் வெளிவந்தால் 1௦௦ கருவேல மரங்களை வெட்ட வேண்டும் என வித்தியாசமான முறையில் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார் அரியலூர் மாவட்ட நீதிபதி ரகுமான்.

குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கும் போது, அதற்கான நிபந்தனை படிவத்தில் சில நிபந்தனைகள்  சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி  ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள்,  20 நாட்களுக்குள் 100  சீமை கருவேல மரங்களை  வெட்டி அகற்றி,  அதற்கான சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்கி சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள சம்பவம்  பெரும்  ஆச்சர்யத்தை  ஏற்படுத்தி உள்ளது .

சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீரை அதிகம் ஈர்ப்பதால், நிலத்தடி நீர் விரைவில் வற்றுகிறது . இதனை தடுக்கும் விதமாக,  சீமை கருவேல மரத்தை நீக்க வேண்டுமெனவும்,  இதனை மாவட்ட  நீதிபதிகள்  கண்காணித்து  அறிக்கை  சமர்பிக்க  வேண்டுமெனவும் , சென்னை  உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை  பிறப்பித்தது  

இதனை தொடர்ந்து , சீமை கருவேல மரத்தை  நீக்கும்  பொருட்டு அரியலூர் மாவட்ட நீதிபதி ரகுமான், ஜாமினில்  வெளிவரும் குற்றவாளிகளுக்கு வித்தியாசமான முறையில் அதிரடி தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டார்

 

Follow Us:
Download App:
  • android
  • ios