Asianet News TamilAsianet News Tamil

இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் ஏழை மாணவர்களால், மருத்துவராகவே முடியாது; விஷால் வருத்தம்.

if this situation continued none of the poor students can study medicine in Tamil Nadu
if this situation continued none of the poor students can study medicine in Tamil Nadu
Author
First Published Jun 5, 2018, 5:47 PM IST


மருத்துவப் படிப்பிற்காக 2017ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் நீட் தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கும் மாநில அரசின் பாடத்திட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும், மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. இதனால் அவர்கள் மருத்துவம் படிப்பதென்பது, நடக்க முடியாத காரியமாக ஆகி இருக்கிறது.

if this situation continued none of the poor students can study medicine in Tamil Nadu

இந்த நீட் தேர்வினால் கடந்த ஆண்டு அனிதா எனும் மாணவியின்  உயிர் பறி போனது. 1176 மதிப்பெண்கள் எடுத்தும் தன்னுடைய கனவுப்படிப்பை படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் அனிதா. இந்த ஆண்டும் இதே போன்று நீட் தேர்வினால் டெல்லி மற்றும் தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

if this situation continued none of the poor students can study medicine in Tamil Nadu

தமிழகத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த பிரதீபா எனும் மாணவி, சென்ற ஆண்டு நீட் தேர்வில் சித்தா படிப்பிற்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால் எம்.பி.பி.எஸ் படிக்கும் கனவில் இந்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வை எழுதினார். ஆனால் மீண்டும் தோல்வியே கிடைத்தது. இதனால் மனமுடைந்த பிரதீபா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் .

இந்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் மீண்டும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதீபாவின் இந்த முடிவினால் வருத்தம் கொண்ட பிரபலங்கள் பலரும், அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="und" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/NEET?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NEET</a> <a href="https://t.co/uzsNBGEnMu">pic.twitter.com/uzsNBGEnMu</a></p>&mdash; Vishal (@VishalKOfficial) <a href="https://twitter.com/VishalKOfficial/status/1003949630562840576?ref_src=twsrc%5Etfw">June 5, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

நடிகர் விஷாலும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “இந்த நிலை தமிழகத்தில் நீடித்தால், இனி எந்த ஏழை மாணவராலும் மருத்துவம் படிக்கவே முடியாது என தெரிவித்திருக்கிறார். மேலும் இது போன்ற தேர்வுகளை மேற்கொள்ள, மாணவர்களுக்கு போதிய பயிற்சி வகுப்புகளை அரசு அமைத்து தர வேண்டும். எனவும் அவர் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios