IAS Transfer : தமிழக அரசின் முக்கிய IAS அதிகாரிகள் திடீர் இடமாற்றம்.!யார் எந்த இடத்திற்கு மாற்றம் தெரியுமா.?

தமிழக அரசில் முக்கிய தூணாக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மக்கள் நல்வாழ்வுத்துறை, நீர் வளத்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட முக்கிய துறையின் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

IAS officers who were holding important positions in the Tamil Nadu government have been transferred to various departments KAK

18 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசில் உள்ள முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சரிவர செயல்படாத அதிகாரிகளை டம்பி பதவிகளுக்கும், சிறப்பாக செயல்படும் அதிகாரிகள் உயர் பதவிக்கும் மாற்றம் செய்யப்படுவார்கள் என கூறப்பட்டது. மேலும் தற்போது தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை முடிவடைந்துள்ள நிலையில், அரசு துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த 18 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், 

  • சுற்றுலா துறையின் கூடுதல் தலைமை செயலாளராக இருந்த மணிவாசன் ஐஏஎஸ் நீர்வளத்துறையின் கூடுதல் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
  • பொதுப்பணி துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த சந்திரமோகன் ஐஏஎஸ் சுற்றுலா துறையின் முதன்மைச் செயலாளர்  நியமனம்
  • கால்நடை பராமரிப்பு துறையின் கூடுதல் செயலாளராக இருந்த மங்கத் ராம் சர்மா ஐஏஎஸ் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக நியமனம்.

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மாற்றம்

  • ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த செந்தில் குமார் ஐஏஎஸ் சுற்றுச்சூழல் துறையின் செயலாளராக நியமனம்.
  • சுற்றுச்சூழல் துறையில் செயலாளராக இருந்த சுப்ரியா சாகு ஐஏஎஸ் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத் துறை செயலாளராக இடம் மாற்றம்.
  • மக்கள் நல்வாழ்வு துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித் துறையின் செயலாளராக நியமனம்
  • நெடுஞ்சாலை துறையின் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வித்துறை செயலாளராக  உயர்கல்வித்துறை செயலாளராக இடமாற்றம்.
  • தமிழ்நாடு சாலை பாதுகாப்பு திட்ட இயக்குனராக இருந்த செல்வராஜ், நெடுஞ்சாலை துறை செயலாளராக நியமனம்.

வீட்டு வசதி துறை செயலாளர் மாற்றம்

  • தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் மேலால் இயக்குனராக இருந்த ஜான் லூயிஸ், சமுக பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமனம்.
  • வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் செயலாளராக இருந்த விஜயலட்சுமி ஐ ஏ எஸ் இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறையின் இயக்குனராக நியமனம்.
  • நில சீர்திருத்தத் துறையின் ஆணையராக இருந்த வெங்கடாசலம், வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆவண காப்பகம்  துறையின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஐபிஎஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios