செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர், என் அண்ணனை கொன்றதால் நான் அவனைக் கொன்றேன் என்று விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
செங்கல்பட்டை அடுத்த பட்டரைவாக்கம், குண்ணவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (41). இவரை, கடந்த 18-ஆம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே அரிவாளுடன் வந்த மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இது தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முத்தரசி உத்தரவின் பேரில், செங்கல்பட்டு டிஎஸ்பி மதிவாணன் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை காவலாலர்கல் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், புதன்கிழமை அன்று காவலாலர்கள் செங்கல்பட்டு புறவழிச்சாலையில் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். இவர்களைக் கண்டதும் சிலர் ஓட்டம் பிடித்தனர். இதனைக் கண்ட காவலாளர்கள் அவர்களை விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் சொங்கல்பட்டை அடுத்த குண்ணவாக்கத்தைச் சேர்ந்த சத்யா (31), அம்மணம்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் (29), ஈச்சங்கரணையைச் சேர்ந்த உமாபதி (27), வெங்கடாபுரத்தைச் சேர்ந்த குமார் (29) என்பதும், இவர்கள்தான் சதீஷை கொலை செய்தவர்கள் என்பது தெரிந்தது.
மேலும் கடந்த 2011-இல் என் அண்ணன் கண்ணையனை, சதீஷ் கொலை செய்து விட்டு சிறைக்குச் சென்று, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அதனால், அவரை நான் கொன்றேன் என்று சத்யா விசாரணையில் ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே சதீஷை இருப்பதை அறிந்த சத்யா தரப்பினர் சதீஷை கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து சத்யா, திணேஷ், உமாபதி, குமார் ஆகிய 4 பேரையும் காவலாளர்கள் கைது செய்து, செங்கல்பட்டு ஜேஎம் 1-ஆவது நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
பின்னர், 4 பேரையும், நீதிமன்ற உத்தரவின்பேரில் செங்கல்பட்டு சிறைச்சாலையில் அடைத்தனர்.
