நடிகர் கமல் ஹாசன், அண்மை காலமாக சமூகம் குறித்து தொடரந்து தனது டுவிட்டர் பக்கம் வழியாக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். 

கமலின் டுவிட்டர் பதிவுகள் சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறது. இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கும் அவர் ஆளாகி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை கமல் சந்தித்தார். அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். 

சென்னை, பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கு சென்று பார்வையிட்ட பிறகு, தனது டுவிட்டர் பக்கத்தில் வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை. அதன் விதை பயமிலாக் கேள்வி.

குத்துமறிவோம் பக்தியும் புரிவோம். தமிழ்க்கோவலர் வாழும் கோயில் தமிழ்நாடு வணங்குதல் நலம் என்றும் நடிகர் கமல் ஹாசன் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன், கேரளாவின் கோழிக்கோட்டில் நடக்க உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள உள்ளார்.

இதற்கு பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில், நடிகர் கமல் ஹாசன், மார்க்சிஸ்ட் கட்சியில் சேரப்போகிறார் என்று பதிவிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த டுவிட்டர் பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.