பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வரும் என எதிர்பார்ப்பதாக பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வரும் என எதிர்பார்ப்பதாக பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வரும் என எதிர்பார்ப்பதாக பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அரசமைப்பில் மத்திய அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி மத்திய அரசு வாதிட்டது. தமிழக அரசும், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில் குடியரசுத் தலைவரை தலையிட வைப்பது ஏன்?

அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை அதிகாரம் இந்த விவகாரத்தில் பொருந்தாது. சிஆர்பிசி சட்டம் மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரத்தை வழங்கவில்லை. ராஜீவ் காந்தி படுகொலை தமிழகத்தில் நடைபெற்றதால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தான் முடிவெடுக்க முடியும். கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என குற்றவியல் நடைமுறை சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று வாதிட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வரும் என எதிர்பார்ப்பதாக பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ஆளுநருக்கு மத்திய அரசு ஏன் வாதிட வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். ஆளுநர் மத்திய அரசுக்கு தான் அறிக்கை அனுப்பி உள்ளார். ஐபிசி குற்றங்கள் மத்திய அரசின் கீழ் தான் வரும். ஐபிசி குற்றங்களில் தண்டனை பெற்றவர்களுக்கு மத்திய அரசே தண்டனை வழங்கும் என்பது தவறான வாதம். பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வரும் என எதிர்பார்க்கிறேன். அடுத்த வாரத்தில் பேரறிவாளனை விடுதலை செய்ய அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
