I am not get rest sleep until the admk amma team candidates will win in election - ttv
மதுரை
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக அம்மா அணி வேட்பாளர்களை வெற்றிப் பெறச் செய்யும்வரை எனக்கு ஓய்வு, உறக்கம் இல்லை என்று மதுரையில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
மதுரையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர் அங்கு நேற்று காலை தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், மனைவி, மகளுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கினார்.
பின்னர், டி.டி.வி.தினகரன் செய்தியாள்ரகளுக்கு பேட்டியளித்தார்.
அவர், “மதுரை மேலூரில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு அதிக தொண்டர்கள் வந்திருந்தனர். இந்தப் பொதுக் கூட்டம் ஒரு தொடக்கம்தான்.
அந்தத் தொண்டர்கள் கூட்டத்தைப் பார்த்து தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தேன். அப்படி திருந்தாதவர்கள் கண்டிப்பாக திருத்தப்படுவார்கள்.
தொடர்ந்து இதுபோன்ற கூட்டம் நடத்தி கட்சி பலப்படுத்தப்படும். இந்தப் பயணம் தொடரும்.
மேலும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக அம்மா அணி வேட்பாளர்களை வெற்றிப் பெறச் செய்யும்வரை எனக்கு ஓய்வு, உறக்கம் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
