மனைவியின் தலையை துண்டித்த பாதுகாவலர்..! "பகீர் காரணம்" கூறும்  கணவர் ..!

திருமணமான ஒரே மாதத்தில், தன் மனைவியை கொன்றுள்ளார்  பாதுகாவலர். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேந்தவர் தான் பாலகுரு என்பவர். இவருக்கும் வேலம்மாள் என்பவருக்கும் கடந்த 31 ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்று உள்ளது

இந்நிலையில், நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு மனைவியை அழைத்து செல்வதாக கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று உள்ளார்.

அப்போது, வழியில் ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்திய கணவர்  பாலகுரு, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து திடீரென வேலம்மாளின் கழுத்தை வெட்டி உள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை, மீண்டும் அறிவாளால் தலையை வெட்டி துண்டித்து உள்ளார்.

தன் மனைவியை துடிக்க துடிக்க கொன்ற சந்தேக சைகோ கணவரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர் .

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அவரை கொன்றேன் என வாக்கு மூலம் கொடுத்துள்ளார்  சந்தேக சைகோ கணவர்.

திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், மனைவியை இப்படி கொன்று உள்ளார் இந்த கணவர்.

இதில் பெற்ற பிள்ளையை ஆசை ஆசையாய் ஒருவனை நம்பி, அவனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற  கனவோடு தான் ஒவ்வொரு பெற்றோர்களும் நினைத்து பார்க்கிறார்கள்.

திருமணம் நடைப்பெற்று விட்டால், கணவருக்கு சொந்தம் மனைவி தான்..  அதற்காக உயிரை பறிக்கும் உரிமை இந்த உலகில் யாருக்கும் இல்லை என்பதை இன்றைய சமூதாயத்தில் வாழும் பெரியவர்கள் தான் தன் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்...சமூதாயத்தில் எதனை முக்கியமாக பார்க்கிறார்கள்..? எது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக  உள்ளது..? அதனால் வரக்கூடிய விளைவுகள் தான் என்ன என்பதை பொருத்து தான் ஒவ்வொருவரின் மனநிலையும் இருகின்றது.

எனவே சிறு வயது முதலே, எது சரி எது தவறு....முடிவெடுக்கும் மன பக்குவமும், அப்படி தவறிழைத்தால் எப்படி அதில் இருந்து ஒதுங்கி இருப்பது என்பது குறித்த புரிதல்  அனைவருக்குமே தேவையானதாக உள்ளது.

இதற்கெல்லாம் இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக கூறலாம்.