சிலிண்டரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து; ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் உள்பட 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்

நாமக்கல் மாவட்டத்தில் சிலிண்டரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் உள்பட 2 பேர் உடல் கருகி உயிரிழப்பு.

husband and wife fire burn and death in namakkal district at gas cylinder fire accident vel

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 68). ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரான இவர் நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வசித்து வந்தார். இவரது வீட்டில் திடீரென கேஸ் சிலிண்டரில் பழுது ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சமையல் எரிவாயு நிறுவனத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் எரிவாயு நிறுவன ஊழியரான அருண் பழுதை சரி செய்வதற்காக இன்று காலை 10.30 மணியளவில் பார்த்தசாரதியின் வீட்டிற்கு வந்துள்ளார். சிலிண்டரில் ஏற்பட்ட பழுதை சரி செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிலிண்டரின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் தீ பரவியது.

இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் மதுரையில் 50 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சினையே கிடையாது - செல்லூர் ராஜூ

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதன் பின்னர் வீட்டில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

போராடியவர்கள் ஆசிரியர்களா? சமூக விரோதிகளா? ஆசிரியர்கள் கைதுக்கு எதிராக அண்ணாமலை ஆவேசம்

மேலும் கருகிய நிலையில் இறந்து கிடந்த பார்த்த சாரதி மற்றும், இவரது பக்கத்து வீட்டுக்காரரான தனலட்சுமி (62) என இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios