Husband - wife suicide

சென்னை, பாடி அருகே முதுமை காரணமாக கணவன் - மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, பாடி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (67). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோதை (57) இவர்களுக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு 2 மகன்களுக்கும் திருமணமாகிவிட்டது. 

குப்புசாமிக்கு, பார்வை கோளாறு உள்ளது. அவரின் மனைவி கோதைக்கு நீண்ட காலமாக கால் வலி உள்ளது. இந்த பிரச்சனைக் காரணமாக அவர்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், குப்புசாமியின் வீட்டுக்காதவு இன்று காலை திறக்கப்படாமலே இருந்துள்ளது. நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால், அருகில் உள்ளோர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

பின்னர் அங்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது குப்புசாமியும், கோதையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனை அடுத்து, வீட்டில் போலீசார் சோதனை செய்தனர் அப்போது, கடிதம் ஒன்று சிக்கியது. அதில், முதுமை காரணமாக, உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் தாங்கள் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும் அதில் எழுதியுள்ளனர். 

இதைடுத்து, அவர்களது உடல்கள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஜே.ஜே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.