நீட் தேர்வில் விலக்களிக்கக்கோரி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இன்று மாலை சென்னையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாரிமுனை உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் மனித சங்கிலி போராட்டத்தை திமுவினர் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், தி.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. பாரிமுனையில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என பங்கெடுத்து வருகின்றனர்.

இதேபோல், சைதாப்பேட்டை சின்னமலையில் ராஜீவ்காந்தி சிலையில் இருந்து செல்லம்மாள் கல்லூரி வரை மனித சங்கிலி போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தை மா.சுப்பிரமணியன் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தின்போது, நீட் தேர்வு விலக்களிக்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. 

திருச்சியில் நடைபெறும் மனிதசங்கிலி போராட்டத்தில், நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.