விழுப்புரம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஆணையர் விளக்கினார்.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் தொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு கூட்டுறவு சங்கங்களின் மாநில தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தலை சிறப்பாக நடத்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த 

இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஜான்பீட்டர் அந்தோணிசாமி, மண்டல இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மலர்விழி, 

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் அனுசுயாதேவி, வேளாண் இணை இயக்குனர் செல்வராஜ், கூட்டுறவு சரக துணைப்பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவு தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.