தமிழ்நாட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்களை செதுக்கும் சிற்பியாக விளங்கும் நான் முதல்வன் திட்டம் குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
தமிழ்நாட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்களை செதுக்கும் சிற்பியாக விளங்கும் நான் முதல்வன் திட்டம் குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து சாதனையாளர்களாக மாற்ற நான் முதல்வன் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் படிப்பை தாண்டி வாழ்விலும் வெற்றி பெற அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் இதற்கான இணையதளத்தில் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் பற்றி அறிந்துக்கொள்ளவும் தங்களின் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளவும் இலவச பயிற்சிகள், குறைவான கட்டணத்துடன் கூடிய திறன் பயிற்சிகள், பாடத்திட்டத்துடன் கூடிய திறன் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டத்துடன் இணைக்கப்படவுள்ள திறனெய்தும் தொழில்நுட்ப பாடங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், மொழித்திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன் பயிற்சிகள், உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகள் என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி நான் முதல்வன் திட்டம் மூலம் படிப்பை முடித்த பட்டதாரி இளைஞர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற வேலைவாய்ப்பை பெற குறுகிய கால பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. இவ்வாறு தமிழ்நாட்டு இளைஞர்களை திறமைமிக்கவர்களாக மாற்றி நாட்டுக்கு அளிப்பதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெறும் இளைஞர்கள் மாநில மற்றும் மத்திய அரசு பணிகளை பெறும் அளவிற்கு திறன்களை வளர்த்துக்கொள்கின்றனர்.
ஆண்டிற்கு சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இத்தகையை ஆக்கப்பூர்வமான திட்டத்தை தொடங்கி வைத்து அதனை செம்மையாக செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கும், மாநில மக்களின் நலனுக்கும் இன்னும் பல திட்டங்களை வழங்குவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
