மனைவி ஞானப்பிரியாவை நண்பருடன் சேர்ந்து கொடூரமாக கொன்றுவிட்டு செய்துவிட்டு நாடகமாடிய கோயில் குருக்கள் மீது சந்தேகப் பார்வை திரும்பியதால் போலிசே பூசாரிக்கு ஷாக் கொடுத்து கண்டுபிடித்துள்ளனர்.

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகணேஷ். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஞானபிரியா என்பவரை காதலித்து திருமணம்  செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு பாலகணேஷ் சென்னை வடபழனியில் உள்ள சிவன் கோயிலில் தற்காலிக குருக்களாக இருக்கும் இவர்கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலை 6 மணிக்கு வீட்டின் உரிமையாளர் கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது பாலகணேஷ் கை கால்கள்  துணியால் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாணமாக கழிவறையில் கிடந்தார். இதை பார்த்த விஜயலட்சுமி அதிர்ச்சியடைந்து பாலகணேஷ் மனைவி  ஞானபிரியாவுக்கு சொல்ல அந்த வீட்டின் கதவை திறக்க முயன்றார். அப்போது கதவு முன்பக்கம் மூடப்பட்டிருந்தது. உடனே பதற்றத்தில்  விஜயலட்சமி கதவை திறந்து உள்ளே பார்த்த போது, படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் ஞானபிரியாவும் கை மற்றும் கால்கள் கயிறால் கட்டப்பட்ட நிலையில் தலையில் காயங்களுடன் கிடந்தார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்து 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ குழுவினர் ஞானபிரியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான  நிலையில் கழிவறையில் கிடந்த பாலகணேசை மீட்டு சிகிச்சைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஞானபிரியாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் சிவன் கோயில் தெரு முனை வரை ஓடி நின்றது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில்,  மர்ம நபர்கள் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக பாலகணேஷ் முதலில் போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் பாலகணேஷ் சொன்னது போல மர்ம நபர்கள் யாரும் அந்த நேரத்தில் வந்து செல்லவில்லை என்பது அந்தப் பகுதியில் இருந்த 12 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசாரின் சந்தேகப் பார்வை பாலகணேஷ் மீதே திரும்பிய நிலையில் நேற்று அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் பாலகணேஷ் தான் ஞானப்பிரியாவை கொன்றார் என்பது அம்பலமானது.அதில்,  இருவருக்கும் திருமணமாகி 4 வருடங்களான போதும் குழந்தைப் பேறு இல்லாததால் இருவரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டதாகவும் சம்பவத்தன்று ஞானப்பிரியா குழந்தையின்மைக்கு நான் தான் காரணம் என்றும் என்னை ஆண்மையற்றவன் என்றும் கூறி இழிவுபடுத்தி பேசினார்.

இதனால் ஆத்திரத்தில் சுத்தியலால் தலையில் அடித்ததில் ஞானப்பிரியா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இந்த கொலையில் இருந்து தப்பிக்க என்னுடைய நண்பன் மனோஜை அழைத்து உதவி கேட்டேன். ஞானப்பிரியாவின் கைகளை கட்டிப்போட்டதோடு, என்னுடைய கைகளையும் கட்டிப்போட்டுவிட்டு மயக்க மருந்து அடித்துவிட்டு சென்றுவிடச் சொன்னே. அவனும் அதேபோல செய்தான். மனோஜ் இந்த விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருக்க ஞானப்பிரியாவின் 15 சவரன் நகைகளை அவனுக்கு கொடுத்து அனுப்பிவிட்டு நகைக்காக நடந்த கொலை போல மாற்றி நாடகமாடினேன் என தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அர்ச்சகர் பாலகணேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது நண்பர் மனோஜ் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் வீட்டில் சாமி சிலைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஞானப்பிரியாவின் நகைகளும் மீட்கப்பட்டன.  மனைவியை கொடூரமாக கொன்ற பூசாரி சிக்கியது எப்படி?
அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமரா மற்றும் இவர்கள் தங்கியிருந்த வீட்டில் கைரேகை சோதனை என தீவிரமாக் விசாரணை நடத்தியதில், எந்த தகவலும் சிக்காததால் பாலகணேஷ் மீது போலீசின் சந்தேகப் பார்வை திரும்பியது.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கண் விழித்த போது தன்னுடைய மனைவி எப்படி இருக்கிறார் என்ற கேட்டுள்ளார் பூசாரி பாலகணேஷ். அதற்கு போலீசார் அவர் நலமுடன் இருப்பதாகக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார் பாலகணேஷ் இதன் பேரிலேயே அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து மனைவியை கொடுரமாக கொன்றது அம்பலமானது.