சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சாப்பிடப்பயன்படுத்திய தட்டு பெரும் சர்ச்சையாகி உள்ளது. அது குறித்து முகநூலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ‘நீதிய நியாயமா இது அடுக்குமா? என்று உலக பிராமணர் ஒற்றுமை என்ற ஒரு குரூப்  குரல் எழுப்ப ஹோட்டல் நிர்வாகம் பணிந்தது. அச்செய்தி தொடர்பான  முகநூல் பதிவுகள் இவை...

சென்னை அண்ணா சாலையில் உள்ள 'தி ரெயின் ட்ரீ' #The_Rain_Tree_Hotel ஓட்டலில் உணவு வகைகள் பாிமாறப்படும் தட்டு இது .இதில் பொறிக்கப்பட்டுள்ள படங்களைக் கூா்ந்து பாருங்கள் .நெற்றியில் நாமம் தாித்த அய்யங்காா் ஒருவாின் படங்கள் .

இந்த தட்டில் சிக்கன் , மட்டன் , பன்றிக்கறி , மாட்டுக் கறி வைத்துச் சாப்பிடுவதை சற்று கற்பனை செய்து பாருங்கள் .இந்துக்களின் அடையாளத்தை இதுபோன்ற தட்டுக்களில் வைத்துப் பாிமாறுவதற்கு எத்தகைய தைாியம் இருந்திருக்க வேண்டும் .

ஓட்டல் உாிமையாளா் இஸ்லாமியராக இருந்தால் , இந்தத் தட்டில் தங்கள் மத அடையாளத்தைப் பொறித்து பயன்படுத்தச் செய்வாரா ?இதுபோன்று சாப்பிடும் தட்டுகளில் ஏசுநாதா் , சா்தாா்ஜி படங்களைப் பொறித்துப் பயன்படுத்த அவா்களுக்குத் துணிவு வருமா ?

இந்துக்களின் பொறுமையைச் சோதனை செய்யவும் ஓா் அளவு வேண்டும் .இந்தச் செயலை மாபெரும் கண்டனத்தோடு எதிா்ப்பைக் காட்ட இந்து அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும் .இந்துக்களுக்கு இதில் விழிப்புணா்வு ஏற்படுத்த சமூக வலைதளங்களில் இப்பதிவைப் பகிருங்கள் இந்து சமுதாயத்தாரே !( *ஹோட்டல் நிர்வாகத்திடம் பேசியபோது அந்த தட்டுகளை மாற்றி விடுகிறேன் என்று கூறியுள்ளார் பார்ப்போம்* )இதுபோன்ற செயல் எங்கு நடந்தாலும் உடனடியாக தெரிவிக்கவும்.

பின்னர் எதிர்ப்பு பரவவே நிர்வாகம் தவறுக்கு மன்னிப்பு கேட்டு தட்டுகளை மாற்றிவிட்டதாம்.