தூய்மை திருச்சி என்ற பெயரில் திருச்சி மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்கும் முயற்சியில் முழு மூச்சாக ஈடுபட்டிருக்கும் திருச்சி மாநகராட்சி சுகாதாரத்துறை, இது போன்ற வெறிநாய்களை அப்புறப்படுத்துவது தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக தெரியவில்லை.
இதனால் இன்று ஒரு பள்ளி சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். 

நத்தர்ஷா  பள்ளிவாசல் அருகே நின்று கொண்டிருந்த இந்த சிறுமியை வெறிநாய் கடித்து குதறி இருக்கிறது. இதனால் படுகாயம் அடைந்த சிறுமி, ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வெறிநாய்களால் மக்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து ,அவற்றை அப்புறப்படுத்த வேண்டியதும் சுகாதரத்துறையின் கடமை தான். இந்த விஷத்தில் அவர்களின் அலட்சியப்போக்கால் தான் இப்படி ஒரு கொடூரம் நிகழ்ந்திருக்கிறது என குற்றம்சாட்டி இருக்கின்றனர் அப்பகுதி மக்கள். 

தூய்மை திருச்சி என்ற பெயரில் சமூக வலைதளங்களில் போட்டோ போட்டு பிரபலமாகுவதில் காட்டும் கவனத்தை, இது போன்ற விஷயங்களிலும் காட்டினால் நன்றாக இருக்கும். இல்லையேல் இந்த வெறிநாய்களால் கூடுதல் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என வருத்தத்துடன் தெரிவித்திருக்கின்றனர் அப்பகுதியை சேர்ந்தோர்.