Hospital Admin Information!
சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக் குறைவு காரணமாக தாம்பரம் அடுத்துள்ள மேடவாக்கம்
அருகே குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழந்ததாகவும், அது குறித்து சிறுநீரகங்கள், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள
வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
உறுப்பு மாற்று சிகிச்சைக்காக கல்லீரல் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும் நேற்று டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், நடராஜனின்
உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
சிறையில் இருக்கும் சசிகலா பரோலில் விரைவில் வருவார் என்று கூறப்படுகிறது.
