Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் விடுமுறை..? பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..வெளியான தகவல்..

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு, பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

Holidays for schools in February.
Author
Tamilnádu, First Published Jan 29, 2022, 4:03 PM IST

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு, பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா மூன்றாம் அலையின் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்து, மீண்டும் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

ஜனவரி 31 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களை படித்துவரும் நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1 -12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகிறது.இவற்றை கருத்தில் கொண்டு பிப்ரவரி 18 முதல் 22 ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்த நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் அமைக்கப்படுவதாலும், தேர்தல் பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் அந்த விடுமுறை தவிர்க்க இயலாததாகிறது என்று துறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.முன்னதாக,கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை ஓய்ந்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பரில் பெரும்பாலான நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பருவமழை ஓய்ந்து டிசம்பர் மாதத்தில் இருந்தாவது நேரடி வகுப்புகளை நடத்தலாம் என பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டிருந்தபோது, கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைய தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios