நாகர்கோவில் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியில் காட்டுப்பன்றி உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் வசித்து வருகின்றன.

இதுபோன்ற அரிய வகை விலங்குகள், இந்தப் பகுதிகளில் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகிறது. 

இது தொடர்பான புகார்களும் மாவட்ட வன அலுவலர் விஸ்வநாதனிடம் அளிக்கப்பட்டும் வருகிறது.

இதன்பேரில், வேளிமலை சரக வன அலுவலர் சில்வெஸ்டர், தெற்கு பிரிவு வனவர் அருண் மற்றும் வனக்காப்பாளர்கள், பணியாளர்கள் கொண்ட குழுவினர் வனப்பகுதியில் அடிக்கடி சுற்றுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது, ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று வனப்பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடிக் கொண்டிருந்தனர்.

இதனைக் கண்ட வனைத்துறை அதிகாரிகள் அந்த ஐந்து பேரையும் கைது செய்தனர்.

பின்னர் விசாரணையில், அவர்கள் ஐந்து பேரும், நயினார்குட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜன், சேகர், அமல்ராஜ், ஷீலன், பிரவீன் ஆகியோர் என தெரியவந்தது.

பின்னர், வனத்தில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பேரையும் வனப் பாதுகாவலர்கள் கைது செய்தனர்.