கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பாதிக்கப்பட்ட    பெண்ணின் மனநிலையையும், அவரது குடும்பத்தினர் மனநிலைமையும்  நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு சூழல் உருவாகி உள்ளது.

தற்போது இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தாலும், தவறு செய்த ஊழியர் மீது நடவடிக்கை எடுத்தாலும் என்ன நடக்க போகிறது.. பாதிப்பு பாதிப்பு தானே..? எச்ஐவி மூலம் அவரது வாழ்நாள்  முழுவதும் அவதிப்பட வேண்டிய நிலை தானே..
  
பாதிப்பின்  உச்சம்

எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டதால், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் நோய் தாக்க வாய்ப்பு அதிகம் என தெரிவித்து உள்ளனர். தான் ஆசை ஆசையாய் பெற்றுக்கொள்ள இருந்த குழந்தைக்கும் எச்ஐவி தாக்க வாய்ப்பு உள்ளது என்ற  நினைப்போடு அந்த கர்ப்பிணி தாயின் வலியும் வேதனையும் எப்படி இருக்கும்..?

தனக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளது என உலகமே தெரிந்த உடன், இந்த சமூகம் அந்த குடும்பத்தை எப்படி பார்க்கும்..?

அது மட்டுமா, கணவன் மனைவி இடையே தாம்பத்ய வாழ்க்கை தான் எப்படி சிறக்கும். எப்போதும் ஒரு பயத்துடன் இருக்க வேண்டிய சூழல்.
தற்போது அரசு, இவர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் செய்துதர முன் வந்து உள்ளது. அதன்படி நிவாரணம்  வழங்க திட்டம், அரசு வேலை கன்பார்ம். ஆனால் இதெல்லாம் ஏற்றுக்கொள்ளும் மன நிலைமையில் அவர்கள் இல்லை. அப்படியே ஏற்றுக்கொண்டாலும், என்ன நடக்கப்போகிறது .. பாதிப்பு அவர்களுக்கு தானே..

நாளையோ அல்லது அடுத்த வருடமோ சரி ஆககூடிய விஷயமா இது... வாழ்நாள் முழுவதும் நொந்து நூடுல்ஸ் ஆக கூடிய விஷயமா அல்லவா பார்க்க முடிகிறது.

எந்த தவறையும் செய்யாமல், இப்படி ஒரு வேதனையை தனது வாழ்நாள் முழுவதும் அந்த பெண் சுமக்கும் போது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மனநிலைமை எப்படி இருக்கும்..? புகுந்த வீட்டு உறவும் சரி, தாய் வீட்டு உறவும் சரி... எவ்வளவு பணம் கொடுத்தாலும் குடும்பத்தையே சிதைத்து விட்டது இந்த கொடூர செயல்.

திடீரென இறப்பு ஏற்படுவது இயல்பே.. ஆனால் இந்த  பாதிப்பு மூலம் தினம் தினம் செத்து பிழைக்கும் நிலையே.. இனியாவது இது போன்ற கொடூர நிகழ்வு வேறு எங்கும் யாருக்கும் வந்து விடக் கூடாது என்பதே ஒட்டு மொத்த மக்களின் மனநிலையாக உள்ளது.