Asianet News TamilAsianet News Tamil

அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்து தலைவர்களை கொல்ல சதி... பல்வேறு இடங்களில் NIA அதிரடி சோதனை!

அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கின் அடிப்படையில் சென்னை, கோவை உள்ளிட்ட 4 இடங்களில் தேசிய புலனாய்வு எனப்படும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாகுல் ஹமீது, ஜாகிர் உசேன் ஆகியோரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

Hindu leaders killed paln... NIA Raid
Author
Tamil Nadu, First Published Dec 19, 2018, 12:35 PM IST

அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கின் அடிப்படையில் சென்னை, கோவை உள்ளிட்ட 4 இடங்களில் தேசிய புலனாய்வு எனப்படும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாகுல் ஹமீது, ஜாகிர் உசேன் ஆகியோரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. Hindu leaders killed paln... NIA Raid

முன்னதாக கோவையில் இந்து அமைப்புகளின் தலைவர்களான அர்ஜுன் சம்பத் மற்றும் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கடந்த செப்டம்பர் மாதம் 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கோவையைச் சேர்ந்த ஆசிக், பைசல் ரகுமான், அன்வர், திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில், சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, சலாவுதீன், சம்சுதீன் ஆகியோர் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். Hindu leaders killed paln... NIA Raid

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் தாமாக முன்வந்து விசாரிக்க தொடங்கினர். இந்த விவகாரம் தொடர்பாக இன்று காலை என்ஐஏ அதிகாரிகள் சென்னை பல்லாவரத்தில் சம்சுதீன், வியாசர்பாடியில் ஜாபர் சாதிக், ஓட்டேரியில் சலாவுதீன் ஆகியோரது வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு, 3 பேர் வீடுகளிலும் 10 மணியளவில் சோதனையை நிறைவு செய்த அதிகாரிகள், சில ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Hindu leaders killed paln... NIA Raid

மேலும் உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ள பைசல், குனியமுத்தூரில் உள்ள அன்வர் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல்  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள இஸ்மாயில் வீட்டிலும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios