சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வருவதையொட்டி வன்முறை சம்பவங்கள் நிகழலாம் என்பதால் சென்னைக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கபட்டுள்ளது.கூவத்தூர் பதற்றத்தில் உள்ளது.

பிப் 5 அன்று சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதும் 2 நாள் கழித்து ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியது முதல் சென்னையில் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தங்கள் தரப்பு எம்எல்ஏக்கள் அணிமாறி விடாமல் இருக்க சசிகலா தரப்பினர் அவர்களை காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்துரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கவைக்க எம்எல்ஏக்கள் கடத்தி அடைத்து வைக்கபட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டியது.

எம்எல்ஏக்கள் சுதந்திரமாகதான் இருக்கிறார்கள். அவர்கள் ஆதரவு எங்களுக்கு தான் சசிகலா தரப்பு சொல்லி கொண்டிருக்கும் போதே தினம் ஒருவர் என இதுவரை 8 பேர் பன்னீர்செல்வம் தரப்புக்கு வந்துவிட்டனர்.

11 எம்பிக்கள் நேரடியாக ஆதரவு தந்துள்ளனர். எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கபடவில்லை என்று போலீசார் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல செய்த அன்று இரவே மதுரை தெற்கு எம்எல்ஏ சரவணன் தப்பி ஓடி வந்து ஒபீசஎஸ்சுக்கு ஆதரவளித்து தாங்கள் அடைத்து வைக்கபட்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சசிகலா அணியிலிருந்து மதுசூதனன், பொன்னையன் இன்று செம்மலை வந்ததுதான் ஹைலைட்.

எம்எல்ஏக்கள் தப்பி செல்வதை அடுத்து கூவத்தூரில் குண்டர்கள் துணையுடன் செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்களை தாக்கியும் மிரட்டியும் வருகின்றனர்.

இன்று சசிகலாவுக்கு வாழ்வா சாவா போராட்டம் துவங்கியுள்ளது. இன்னும்சற்று நேரத்தில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் வன்முறை நிகழலாம் என்பதால் உச்சகட்ட பாதுகாப்பு தமிழகம் முழுவதும் அளிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் 10,000 போலீசார் காலை 5 மணி முதலே குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

மறுபுறம் சசிகலா கூவத்தூரில் தங்கியிருப்பதால் தீர்ப்பை ஒட்டி வன்முறை நிகழலாம் என்பதால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முற்றிலும் குறைக்கபட்டுள்ளது.

மத்திய மண்டலம், வடக்கு மண்டல ஐஜிக்கள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட் செல்லும் பாதை போலீசாரால் மூடி சீல் வைக்கபட்டுள்ளது.

உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. தீர்ப்பு வந்த பிறகு வன்முறை எதுவும் நிகழாமல் தடுக்க போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.