நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக, தலைமை செயலர் தரப்பில் வெறும் சம்பிரதாயத்திற்காக அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவும் விடுக்கப்பட்டுள்ளது.  

நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கு ஒன்றில், தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முதல்படியாக தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பளவு குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றை அரசு தரப்பிலிருந்து அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் நீர்வள ஆதராங்களை பெருக்கி அதன்மூலம் தமிழகத்தின் நீர் தேவைகளை பூர்த்தி செய்யவும், நீர்நிலைகளை பாதுகாக்கவும் தமிழக அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்பணிப்பபோடு செயல்பட்டு வருவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மேலும் அதில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக, மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் சேகரித்து, வருவாய்துறை செயலாளருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் நீர்நிலை ஆக்கிமிப்புகளை அகற்றவது மட்டுமல்லாமல், நீர்நிலைகளின் நீர் இருப்பின் அளவை முன்பிருந்தது போல் பேணவும் நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்படும் என்றும் நீர்நிலைகளை தூர்வாரி உரிய முறையில் பராமரித்து பழைய நிலைக்கே கொண்டு வந்து பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கபட்டது.

இந்த அறிக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு ,அறிக்கையில் நீதிமன்றம் கோரிய எந்த விபரமும் இல்லை என கடும் கண்டனம் தெரிவித்தனர். எங்கு நீர் நிலை உள்ளது என தெரிந்தால் தான் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய இயலும். எனவே தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நீர் நிலைகள் உள்ளன, அதன் சர்வே எண், அதன் பரப்பளவு உள்ளிட்ட விவரங்களைதான் அரசிடம் கேட்டோம் என்று கூறிய நீதிபதிகள், ஆனால் அவை சமர்ப்பிக்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். அந்தவகையில் இந்த அறிக்கை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தோல்வியை காட்டுகிறது என்றும் கூறினர். சம்பிரதயாத்துக்காக மட்டுமே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறி இவ்வழக்கில் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அனுமதித்த ஒரு அதிகாரி கூட, தண்டனையில் இருந்து தப்ப முடியாது என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், தமிழக மக்களின் நலனுக்காகத்தான் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கின்றது என்று தெரிவித்தனர். இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 16ஆம் தேதி தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.