கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை அடைத்து வைத்துள்ள மருத்துவமனை , இது பற்றி புகார் அளித்தும் கனவரை விடுவிக்க போலீசர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நோயாளியின் மனைவியின் ஆட்கொணர்வு மனுவுக்கு போலீசும், தனியார் மருத்துவமனையும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கல்லீரல் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கணவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தகோரி மனைவி தொடர்ந்த வழக்கில் குளோபல் மருத்துவமனை மற்றும் பள்ளிக்கரணை காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதின்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தமானை சேர்ந்த மீனாள்சிங், இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள ஆட்கொணர்வு வழக்கில் தனது கணவர் அஜய்சிங் கல்லீரல் பிரச்சனை காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறி ரூ. 32 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்தாகவும் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் தற்போது மேலும் ரூ. 39 லட்சம் கட்ட வேண்டும் என்று நிர்பந்திப்பதாகவும், இல்லையேன்றால் கணவரை மருத்துவமனையிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையின் இந்த நடவடிக்கை இந்திய மருத்துவ கொள்கைக்கு எதிரானது என சுட்டிக்காட்டிய மனுதாரர் இதுதொடர்பாக பள்ளிக்கரணை காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் எனவே சட்டவிரோதமாக வைத்துள்ள தனது கணவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடவேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபல், பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக வருகிற 18 த்தேதிக்குள் பள்ளிக்கரணை காவல்துறை மற்றும் குளோபல் மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்கவேண்டும் என கூறி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.