அரசு கொண்டு வரும் சட்டத்தை அதிகாரிகளே பின்பற்றுவதில்லை. மதிப்பதில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தியுடன் வேதனை தெரிவித்தனர்.
அரசு கொண்டு வரும் சட்டத்தை அதிகாரிகளே பின்பற்றுவதில்லை. மதிப்பதில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தியுடன் வேதனை தெரிவித்தனர். பைக்கில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணியபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கொண்டு வரும் சட்டத்தை அரசே பின்பற்றுவதில்லை. அதை செயல்படுத்துவது இல்லை. காவல்துறையினர், பைக்கில் செல்வோர் ஹெல்மெட் அணியாவிட்டால், மடக்கி பிடிக்கின்றனர். ஆனால், அதை அவர்கள் பின்பற்றுவதில்லை. பெரும்பாலான போலீசார் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்கின்றனர்.

காரில் செல்வோர் சீட் பெல்ட் அணியவேண்டும் என அபராதம் விதிக்கிறார்கள். ஆனால் அதிகாரிகளோ, அரசியல் கட்சி தலைவர்களோ அதை செய்வதில்லை. சட்டத்தை கொண்டுவரும் அவர்களே, அந்த சட்டத்தை மதிக்காமல் செயல்படுகின்றனர். 
பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவது, காரில் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டும் போதாது. அதை செயல்படுத்த வேண்டும். தேசிய கொடியுடன் வரும் வாகனங்களையும் போலீசார் மதிப்பதில்லை என்பதை கண்கூடாக பார்க்கிறோம். ஒரு சல்யூட் அடிப்பதில்லை என அதிருப்தியுடன் தெரிவித்தனர்.
