சென்னை  முதல் சேலம் வரையிலான எட்டு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து  உள்ளது உயர்நீதிமன்றம். இந்த  திட்டத்திற்காக இதுவரை கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு, தமிழக அரசு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பாளையத்தில் தனியார் நிலத்தை உட்பிரிவு செய்து அனுப்பிய கடிதத்தை நீதிபதிகள் ஆராய்ந்தனர்.நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஏன் வற்புறுத்தி கையகப்படுத்தப் படுகிறது என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது . இந்த நிலை இப்படியே தொடருமானால் ஒட்டு மொத்த திட்டத்திற்கும் தடை விதிக்க நேரிடும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது .

இந்நிலையில், பசுமை வழி சாலை திட்டத்தில் தேவையற்ற அவசரத்தை மாநில அரசு காட்டுவதாகவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சுற்றுச் சூழல் ஆய்வு எந்த நிலையில் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக, வெள்ளிக்கிழமையன்று அறிக்கை அளிப்பதாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்  தெரிவித்ததை தொடர்ந்து இன்று  விசாரணைக்கு  வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை  முதல் சேலம் வரையிலான எட்டு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது.