கோவை ஜானகியம்மாள் கலைக் கல்லூரியில் பன்னாட்டுக் குளிர்பானத்துக்குத் தடை விதித்தும், அதற்குப் பதிலாக பழச்சாறுகள் வழங்கப்படும் என்று கல்லூரி முதல்வர் சுற்றறிக்கை வெளியிட்டு அசத்தியுள்ளார்.
சல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தை தை புரட்சி என்றே அழைக்கலாம். ஆம் புரட்சி தான். இது வெறும் சல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்று மட்டும் நடந்த போராட்டம் அல்ல். ஆட்சியாளர் இல்லாமல் மக்களை மக்களே வழிநடத்த முடியும் என்ற எடுத்துக்காட்டே.
மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களின் பொறுப்பை களத்தில் சரியாக பின்பற்றினர். உதாரணமாக களத்தில் போடப்பட்ட உணவுப் பொட்டலங்களை அவர்களே சுத்தம் செய்தது, வாகனங்களை ஒழுங்குமுறைப்படுத்தியது என சொல்லிக்கொண்டே போகலாம்.

இதே போராட்டக்களத்தில் தான் மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் அந்நிய குளிர்பானத்தை இனி அருந்த மாட்டோம் என்று உறுதியேற்றனர்.
அதன் தாக்கம், போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் கூட அதே உறுதிமொழியை ஏற்று இயற்கை பானங்களான இளஞீர், கரும்புச்சாறு, பதநீர் போன்றவற்றிற்கு மாறியது.
போராட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போதே தமிழகத்தில் உள்ள கடைகளில் அந்நிய குளிர்பானங்களை கீழே போட்டுடைத்து தங்களது ஆதரவை அளித்து தைப் புரட்சிக்கு வித்திட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, திரையரங்குகளீலும் அந்நிய குளிர்பானங்களுக்குப் பதிலாக இயற்கை பானங்கள் மட்டுமே விற்கப்படும் என்று அறிவித்து தற்போது விற்றும் வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை ஜானகி கலைக் கல்லூரியின் முதல்வர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “இனி கல்லூரியில் அந்நிய குளிர்பானங்களுக்குப் பதிலாக இயற்கை பழச்சாறுகள் வழங்கப்படும்” என்று வெளியிட்டார்.
இதனை மாணவர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
இந்த மாற்றம் புரட்சியால் மட்டுமே வரும்.
இப்போ சொல்லுங்க இது புரட்சி தானே!!!
