உஷார்...! இந்தியா வரும் "அமெரிக்க லெக் பீஸ்"..! நோயும் அதிகமாக போகுது..

இந்தியாவிலேயே,பிராய்ளர் கோழி வளர்ப்பில் தமிழகம்  தான் முதலிடம் வகிக்கிறது.அடுத்ததாக  கர்நாடக, ஆந்திரா, பஞ்சாப், மத்திய பிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் பண்ணைகள் வைக்கப்பட்டு பெருமளவில் கோழி  வளர்க்கப்பட்டு வருகிறது.இதில்,90 %  உள்நாட்டிலேயே வியாபாரம் செய்யப்படுகிறது

இந்நிலையில்,அமெரிக்காவிலருந்து கோழியை  இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய மத்திய அரசு பச்சை கொடி காட்டி உள்ளதாக கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்க  செயலாளரான வாங்கிலி  சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.அமெரிக்காவில்  வளர்க்கப்படும்  கோழிகளுக்கு மரபணு மாற்றப்பட்ட  சோயா பீன்சை உணவாக  கொடுக்கப் படுகிறது.

இந்தியாவில் மரபணு  மாற்றப்பட்ட சோயா பீன்சுக்ககு தடை உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. மேலும், அமெரிக்க கோழிகளுக்கு அதன் தொடை பகுதியில் ஊசி போடுவதால் அதிவேக வளர்ச்சி அடைகிறது.

இந்த கோழிகளின் லெக் பீசை அவர்கள் உண்பதில்லை..ஆனால் பதபடுத்தப்பட்ட லெக் பீஸ் இந்தியா வர உள்ளது.

அமெரிக்காவில், இந்த கோழியின் லெக் பீஸ் ஒரு கழிவு  பொருளாக  உள்ளது.ஆனால் இந்தியாவில் அது  மெயின் டிஷ்ஆக  மாற உள்ளது.

இதற்காக கடந்த  ஏழு ஆண்டுகளாக, 50 லட்சம்  டன் லெக் பீஸ்கள் பதப்படுத்தப் பட்டுள்ளன.

இவை  இந்தியா  வரவுள்ள  பட்சத்தில், சுவையில் மயங்கி  நம்மவர்கள் அதிகம் உண்பார்கள்... உடல் பருமன் அதிகமாகும், தேவை இல்லாத  கொழுப்பு அதிகரிக்கும் .... இதயம் முதல் சிறுநீரகம் வரை அனைத்து உறுப்புகளும் பாதிக்கபடும்...

ஏற்கனவே  இந்தியாவில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழி உண்டாலே,பெரும்சிக்கல்  ஏற்பட்டு வரும் நிலையில்,அமெரிக்க லெக் பீஸ் பெரிய பெரிய ஓட்டல்களில் ஸ்டைலாக  விற்கப்படும்..நம்மவர்களும் ரசித்து ருசித்து சாப்பிட்டு, உடலைகெடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.